யுகம் என்பது இந்துக்களின் கால கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று./p>
யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:
கிருத யுகம் - அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 5 அடி உயரமும், 840 வருடமும் வாழலாம்.
திரேதா யுகம் - நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 616 வருடமும் வாழலாம்.
துவாபர யுகம் - சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், 300 வருடமும் வாழலாம்.
கலியுகம் - நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 வருடம் வாழலாம். இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைகுணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.
இதன்காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்றுகுவித்து மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு யுகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன.
கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. மற்ற யுகங்களை விட மிகவும் சிறியது.
துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகதை விட இரண்டு மடங்கு பெரியதான கால அளவு கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகதை விட மூன்றுமடங்கு பெரியதான கால அளவு கொண்டது.
கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகதை விட நான்கு மடங்கு பெரியதான கால அளவு கொண்டது.
[ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம்.
12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.
14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம்.
இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்களின் விவரம் :
1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.
தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.சரி, யுகங்களை பற்றி இன்னும் தெளிவாகப் பார்க்கலாம்.
ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள் ?
1 மனித வருடம் = 1 தேவ நாள்
325 மனித ஆண்டு = 1 தேவ ஆண்டு
1200 தேவ ஆண்டு = கலியுகம்
2400 தேவ ஆண்டு = துவாபரயுகம்
3600 தேவ ஆண்டு= திரேதாயுகம்
4000 தேவ ஆண்டு = கிருதயுகம்
12,000 தேவ ஆண்டு = சதுர்யுகம்.
மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.
கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.
திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம் (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.
துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம் (308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.
கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.
இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம்.
14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.
மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.
அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும். 12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.
ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.
கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.
திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.
துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.
கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.
மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம்.
இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.
சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.
ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.
பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள். (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).
இரண்டு மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள்.
இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு ஆகும்.
பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள் மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.
ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார்.
தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின் வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது. அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும். அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.
கல்பங்களின் விவரம் :
1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.
கிருத யுகத்தில் தர்மம் மட்டுமே உண்டு தேவர்கள் வாழ்ந்த காலம்.
திரேதா யுகத்தில் தான் இராமன், சீதை, இராவணன் உள்ள காலம்.
துவாபர யுகத்தில் தான் மகாபாரதம் நடந்தேரியது.
கலியுக முடிவில் கிருஷ்ணன் கல்கி அவதாரம் எடுத்து உலகை அழித்து மீண்டும் கிருத யுகமானது தொடங்கும்.
அகத்தியர் கூறிய பதினெட்டு யுகங்கள் :
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இப்படி நான்கு வகை யுகங்கள் இருப்பது பற்றி நாம் பார்த்த்த்தோம்.
ஆனால் அகத்தியர் வாத சௌமியம் என்னும் நூலில் பதினெட்டு யுகங்கள் இருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார். வாருங்கள் அந்த பாடலை முழுமையாக கீழே பார்ப்போம்.
அகத்தியர் பாடல் :
கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறுகோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன்
கனமான வீராசன் நாலைந்துதானே.
தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி
தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி
மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி
மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி
பானென்ற பணியிரதம் நான்குகோடி
பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி
வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும்
மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே.
பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு
பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு
விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் தனைக்கேளு
தீர்க்கமுடன் ஓன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம்.
அகத்தியர் அருளிய பதினெட்டு யுகங்களின் விவரம் பின் வருமாறு…
மேலே உள்ள பாடலை கவனித்தால் இதுவரை நாம் தெரிந்துவைத்துள்ள நான்கு யுகங்களும் அதில் இருக்கின்றன.
அவை நான்கும் தான் இறுதி யுகங்களாக அகத்தியர் குறிப்பிட்டுளளார். அதே போல ஒவ்வொரு யுகத்திற்கான கால அளவையும் அகத்தியர் தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

Your comment will be visible after approval.