யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் விநாயகரை பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்டதுடா ? இதோ உங்களுக்காக ஆதி விநாயகர் கோயில் சிறப்பு உண்மைகள்.
 |
| Naramuga Vinayagar Thilatharpanapuri |
Table(toc)
திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் முக்தீஸ்வரர் ஆலையம் உள்ளது.
இங்கு மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருத்திலதைப்பதி. இதற்கு திலதர்ப்பணபுரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இன்றைய நாளில் இத்தலம் செதலபதி என்று அழைக்கப்படுகிறது.
- இறைவன் பெயர்: மதிமுக்தீஸ்வரர்.
- இறைவி பெயர்: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி.
- இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
தல வரலாறு
ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் உள்பட ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான்.
அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்றுகொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும்படி கட்டளையிட்டு, நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார்.
பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம். செய்தார். சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்துக்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயணியான பார்வதி,
அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்துகொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட, அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.
புராணக்கதைகள்
ஒருமுறை நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்யவேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக்கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர் ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான்.
கடைசியில் திலதைப்பதி வந்தபோது, பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக்கொண்டார்களாம்.(alert-success)
அதனால் அந்தமாதிரியான பித்ரு. காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள்.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாகக் கருதப்படுகின்றன.
இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது.
இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை.(alert-success)
எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
முக்தீஸ்வரர் பெயர் காரணம்
தசரதனுக்கும், ஜடாயுவுக்கும் ராமன், லக்ஷ்மணன் இருவரும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம்.
ராமன் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. அதனால் இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.(alert-success)
ராமன் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்துவைத்து பூஜித்தார். இந்தப் பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையிலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம்.
இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.
ஆதி விநாயகர்
இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் ஓடும் ஆறு
இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி ஆகும். இது போன்ற ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவை.(alert-success)
சத்குரு வேங்கடராம சுவாமிகள் கூறியதாவது
சிதலப்பதி ஆலயத்தின் முன் பிள்ளையாரப்பர் மனிதமுகத்துடன், நரமுக விநாயகராக, ஆதிவிநாயகராக மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் அருள்கின்றார். வேறெங்கும் இத்தகைய திவ்ய ஸ்ரூபத்தைக் காண இயலாது.
அகத்தியர்
ஸ்ரீ அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூக்கும வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்ளையார் மூர்த்தி இவர்.
இந்த கோயிலின் சிறப்பம்சம்கள்
திலதர்ப்பணபுரி இல் எந்த நாட்களிலும் தர்ப்பணம் செய்து பலன் பெறலாம். அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம்.
குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், புதல்விகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாக மூர்த்தி.
குழந்தைகளுக்கு , பள்ளி பருவத்தினருக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல வல்லப மூர்த்தி.
Your comment will be visible after approval.