புரதம் மற்றும் வைட்டமின் தாதுக்கள் நிறைந்த நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும் சிக்கன் வறுவல் போன்ற சுவை கொண்ட மீல்மேக்கர் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- 1கப் சோயா சன்க்ஸ்
- 1டேபிள் மிளகாய் தூள்
- 1டேபிள் தனியா தூள்
- 1/2டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1டேபிள் ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
- 2 பெரிய வெங்காயம் அல்லது 100கிராம் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1டீஸ் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- உப்பு
- தாளிக்க பட்டை கிராம்பு சோம்பு
- கறிவேப்பிலை
- மல்லி இலை
செய்முறை :
முதலில் ஒரு கப் சோயா சன்க்ஸ் எடுத்து சூடான தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து, பிழிந்து எடுத்து, குளிர்ந்த நேரில் போட்டு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியை சூடு செய்து எண்ணை, சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, ஒன்றன் பின் ஒன்றாக எல்லாப் பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள சோயாவை சேர்த்து, நன்கு பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்துக் கலந்து, அரை கப் தண்ணீர், உப்பு சேர்ந்து மூடி வைக்கவும்.
இருபது நிமிடங்கள் வேக விடவும். இடை இடையில் கலந்து விடவும்.
குறிப்பிட்ட நேரம் கழித்து எடுத்து, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை சேர்த்து கலந்து உப்பு சரி பார்த்து இறக்கவும்.
இப்போது உங்களுக்கு சோயா வறுவல் சுவைக்கத் தயார்.
சிக்கன் மசாலாத் தூள் போட விருப்பம் இல்லை என்றால், போடாமலும் வறுத்து எடுக்கலாம். கொஞ்சம் சுவை தான் மாறும்.

Your comment will be visible after approval.