How to Make Instant Lemon Pickle
தயிர் சாதமும் தொட்டுக்க ஊறுகாயும் இருந்தால் போதும் எவ்வளவு சாப்பிட்டாலும் அடங்காது. அந்தளவுக்கு இந்திய உணவுகளில் ஊறுகாய்க்கு என்று தனி இடம் உண்டு. அதிலும் தொட்டதும் சப்பு கொட்ட வைப்பதில் எலும்பிச்சை ஊறுகாய்க்கு தான் முதலிடம்.
அதன் புளிப்பு சுவையும் காரசாரமான மசாலா கலவைகள், உப்பு என்று சுவை கூடிக் கொண்டே செல்கிறது. வீட்டில் குழம்பு, கூட்டுக்கு எதுவுமோ இல்லையென்றால் கூட இந்த எலும்பிச்சை ஊறுகாய் ஒன்றே போதும்.பொதுவாக எலும்பிச்சை ஊறுகாய் செய்ய வேண்டும் என்றால் நீண்ட நாட்கள் பிடிக்கும். லெமனை ஊற வைத்து மசாலாக்கள் தூவி என்று இரண்டு நாட்களாவது ஆகும்.
ஆனால் இங்கே உடனடி எலும்பிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்று சொல்லப் போகிறோம். இந்த ரெசிபியின் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே சில மணி நேரங்களில் ஊறுகாய் தயாரிக்க முடியும். உடனடியாக ஊறுகாய் செய்து நீங்கள் சுவைக்கலாம். பாட்டிலில் அடைத்து வைத்து கூட நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்
- 6 Numbers நறுக்கிய எலுமிச்சை
- 1 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
- 1 தேக்கரண்டி கடுகு
- தேவையான அளவு பெருங்காயம்
- 2 தேக்கரண்டி வெந்தயம்
- தேவையான அளவு மிளகாய் பொடி
- தேவையான அளவு உப்பு


Your comment will be visible after approval.