உங்கள் காரில் உள்ள ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Table(toc)
இன்றைய நவீன யுக கார்கள் பல்வேறு வசதிகளுடன் வருகின்றன. எனவே கார்களில் உள்ள பிரச்னைகளை உரிமையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக, ஸ்பீடோமீட்டர் கன்சோலில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு எச்சரிக்கை விளக்குகளை வழங்குகின்றன.
இந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம்? என்பது புரியாமல் சிலர் குழம்பி கொள்கின்றனர்.
எனவே கிட்டத்தட்ட அனைத்து கார்களுக்கும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளுக்கு அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆனால் இங்கே வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை விளக்குகள் அனைத்தும் நீங்கள் வைத்திருக்கும் காரிலும் இருக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
ஒரு சில எச்சரிக்கை விளக்குகள் இல்லாமல் போகலாம், மேலும் ஒரு சில எச்சரிக்கை விளக்குகளை பற்றி இந்த செய்தியில் கூறாமல் இருக்கலாம்.
ஆனால் உங்கள் காரில் உள்ள ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கிற்கும் என்ன அர்த்தம்? என்பதை சரியாக தெரிந்து கொள்ள உரிமையாளர் கையேட்டை (Owner Manual) பார்ப்பது நல்லது.
எனக்கு தெரிந்த எல்லா கார்களுக்கும் பொதுவான எச்சரிக்கை விளக்குகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
டோர் ஓபன் வார்னிங் லைட்
ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படவில்லையென்றால், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும். ஒரு சில கார்களில் எந்த கதவை மீண்டும் சரிபார்க்க வேண்டும்? என்ற சரியான தகவலும் காட்டப்படும்.
வாஷர் ஃப்ளூயிட் ரிமைண்டர்
வைப்பர் திரவு அளவு மிகவும் குறைவான நிலைக்கு செல்லும்போது இந்த விளக்கு எரியும். ஆனால் இந்த எச்சரிக்கை விளக்கு பொதுவாக பிரீமியம் கார்களில் மட்டுமே காணப்படும்.
ஏபிஎஸ் லைட்
காரின் ஏபிஎஸ் பிரேக்கில் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கோளாறுகள் இருந்தால், இந்த விளக்கு எரியும். ஆனால் இது ஏபிஎஸ் பிரேக்கில் உள்ள கோளாறுகளை மட்டுமே குறிக்கும். இந்த விளக்கு எரிவதால், வழக்கமான பிரேக்கிங் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம் கிடையாது.
க்ரூஸ் கண்ட்ரோல் லைட்
உங்கள் காரில் நீங்கள் க்ரூஸ் கண்ட்ரோலை ஆக்டிவேட் செய்திருக்கும்போது இந்த விளக்கு ஒளிரும்.
ஆட்டோமேட்டிக் ஷிஃப்ட் லாக்
ஆட்டோமேட்டிக் கார்களை பொறுத்தவரை நீங்கள் நியூட்ரலில் இருந்து கியருக்கு மாறும்போது பிரேக்கை அழுத்த வேண்டும். ஆனால் நீங்கள் பிரேக் பெடலை அழுத்தாமல், நியூட்ரலில் இருந்து கியருக்கு மாற முயற்சித்தால், பெரும்பாலான கார்களில் இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.
டிராக்ஸன் கண்ட்ரோல் ஐகான்
தற்போது ஏராளமான கார்கள் டிராக்ஸன் கண்ட்ரோல் வசதியுடன் வருகின்றன. அந்த கார்களில் டிராக்ஸன் கண்ட்ரோலை டிஆக்டிவேட் செய்வதற்கான வசதிகளும் இருக்கும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது கன்சோலில் இந்த ஐகான் தோன்றும்.
பனி விளக்கு ஐகான்
நீங்கள் பனி விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்யும்போது, ஸ்பீடோமீட்டர் கன்சோலில் இந்த ஐகான் தோன்றும்.
சீட் பெல்ட் வார்னிங்
பெரும்பாலான கார்களின் ஸ்பீடோமீட்டர் கன்சோலில் பொதுவாக காணப்படும் எச்சரிக்கை விளக்கு இது. காரை ஓட்டும்போது நீங்கள் சீட்பெல்ட் அணியவில்லை என்றால், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.
ஏர்பேக் ஐகான்
காரை ஸ்டார்ட் செய்த பிறகும் கூட, இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்து கொண்டே இருந்தால், காரின் ஏர்பேக் சிஸ்டமில் ஏதேனும் கோளாறுகள் இருப்பதாக அர்த்தம். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு செல்வதன் மூலமாக மட்டுமே இதனை சரி செய்ய முடியும்.
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஐகான்
தற்போது பல்வேறு கார்கள் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உடன்தான் வருகின்றன. காரின் ஏதேனும் ஒரு டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தாலோ அல்லது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலோ இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும்.
இயந்திர வெப்பநிலை எச்சரிக்கை விளக்கு
காரை ஸ்டார்ட் செய்த பிறகும் கூட, இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால், காரின் எஞ்சின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகிறது என்று அர்த்தம். காரின் குளிரூட்டியில் ஏதேனும் கோளாறுகள் இருப்பதாக அர்த்தம். இதை உடனே சரி செய்ய வேண்டும் இல்லையெனில் காரின் எஞ்சின் முழுவதுமாக பழுதாகும்.
ஆயில் பிரஷர் எச்சரிக்கை விளக்கு
என்ஜின் ஆயில் பிரஷர் எச்சரிக்கை விளக்கு எரிந்தால், உங்கள் இயந்திரம் சாதாரண எண்ணெய் அழுத்தத்தை இழந்துவிட்டது என்று அர்த்தம். இதனால் காரில் ஆயில் கசிவு ஏற்பட்டால் அல்லது ஆயில் கசிவை . கண்காணிக்கும் சென்சாரில் கோளாறு ஏற்பட்டால் இந்த விளக்கு எரியும்.
பேட்டரி சார்ஜ் எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால், உங்கள் காரின் பேட்டரி செயல்திறன் குறைவாக இயங்குகிறது. இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்வரை காரை ஆப் செய்ய வேண்டாம். காரில் தேவையில்லாத விளக்குகள் மற்றும் ஆடியோ, AC போன்றவற்றை ஆஃப் செய்யவும்.
பிரேக் எச்சரிக்கை விளக்கு
இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால், காரில் ABS அல்லாத சாதாரண பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது அல்லது பிரேக் ஆயில் குறைவாக உள்ளது என அர்த்தம்.
இது மிகவும் ஆபத்தானதாகும். இந்த விளக்கு நிரந்தரமாக எரிந்தால், வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, தகுதி வாய்ந்த பழுதுபார்க்கும் கடைக்கு இழுத்துச் செல்ல வேண்டும்.
எஞ்சின் எச்சரிக்கை விளக்கு
இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால், உங்கள் இயந்திரத்தில் சிக்கல் உள்ளது என்று அர்த்தம். இது ஒரு சிறிய மின் பிரச்சினையாக இருக்கலாம், ஆனால் அது உடனடியாக சரிபார்க்கப்படாவிட்டால், மேலும் மேலும் கணிசமான சேதத்திற்கு வழிவகுக்கும். உங்களால் முடிந்தவரை சீக்கிரமாக காரை மெக்கானிக்கிடம் கொண்டு செல்லுங்கள்.
Glow plug indicator
உங்கள் கார் டீசலில் இயங்குகிறது என்றால் இந்த Glow plug indicator எரியும். இது டீசல் என்ஜின்களின் இயல்பு காரணமாக, முதலில் குளிர்ந்த வெப்பநிலையில் தொடங்கும் போது அவர்களுக்கு கூடுதல் வெப்பம் தேவைப்படுகிறது. Glow plug indicator என்பது ஒரு வெப்பமூட்டும் உறுப்பு ஆகும், இது இயந்திரத்தின் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும்போது தொடக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.
குறைந்த எரிபொருள் காட்டி
உங்கள் காரில் இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால் எரிபொருள் குறைவாக உள்ளது என அர்த்தம். இந்த எச்சரிக்கை விளக்கு தொடர்ந்து எரிந்தால் இன்னும் சிறிது தூரத்திற்குள் கார் எரிபொருள் இல்லாமல் நிற்க போகிறது என்று அர்த்தம். உடனே எரிபொருள் நிரப்புங்கள்.
சேவை நினைவூட்டல்
இந்த எச்சரிக்கை விளக்கு விலையுயர்ந்த காரில் மட்டும் இருக்கும். இது எரித்தல் சர்வீஸ் செய்ய வேண்டிய நேரம் இது என அர்த்தம்.
இது எல்லாமே Car Warning Light Symbols and Indicators Meanings ஆகும். இது எதற்காக ஒளிர்கிறது என கவனிக்கவும். மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி.











Your comment will be visible after approval.