சனியனே என திட்டினால் ஆபத்து !
சனியனே என்று ஏன் திட்டக் கூடாது ?
அதனால் குழந்தை என்ன சேஷ்டை செய்தாலும் அவர்களை சனியன் என்று மட்டும் திட்ட வேண்டாம், அதனால் சனி பகவானின் கெடு பார்வை உங்கள் மீது விழ நேரிடும். மந்தகதி உள்ளவர்களைப் பக்குவமாகப் பேசி திருத்துபவர்களுக்கு சனியின் அருள் கிடைக்கும்.
பல வீடுகளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காவிட்டால், அடம்பிடித்தால், ஏதேனும் தவறான செயல்களை செய்துவிட்டால் அவர்களை சனியனே என திட்டுவதுண்டு.
ஆனால் அப்படி உங்கள் பிள்ளைகளையோ, வேறு யாரையும் சனியனே திட்டினால் அதனால் ஆபத்து உங்களுக்குத் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சனியனே என திட்டினாள், சனி பகவான் தன்னைக் கேலி செய்வதாகக் நினைத்து, கோபமடைந்து அப்படி திட்டுபவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். (alert-warning)
வீட்டில் குழந்தை சரியாக படிக்கவில்லை என்றாலோ, சோம்பலாகவே இருக்கிறது என்றாலோ ஏன் மந்தமாக இருக்கிறாய் என்று தான் கேட்பதுண்டு. அப்படி மந்தகதி உள்ளவர்களுக்காகச் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்.
ஆபத்தான சொல் !
சனீஸ்வரனை மந்தமான கடவுள் என்று அனைவரும் கூறுவர். அவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. மேலும் சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் மெதுவாகவே சூரியனை சுற்றி வருகிறது என்பதால் அறிவியல் ரீதியாகவும் அப்படி சொல்லப்படுகிறது. அவ்வாறு வருகையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்ரமிப்பார்.அதனால் சனியனே என்று யாரையும் திட்டிவிட வேண்டாம். கோபத்தில் சனியனே என்று திட்டிவிட்டு பின்பு அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்.
சனியன் என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடாத மேலும் இரண்டு வார்த்தைகளும் உண்டு. (alert-warning)
மூதேவி - இது லட்சுமியின் சகோதரியைக் குறிக்கும். சொல்பவரையும் பாதிக்கும், சொன்னவரையும் அதிகம் பாதிக்கும். பின்பு மூதேவி நிரந்திரமாக நம்மிடம் குடியேறிவிடுவாள்.
பிரம்மகத்தி - இதனை பிராமண வீடுகளில் திட்டுவதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தை கூறுவதால் பிரம்மகத்தி தோஷம் ஏற்படும்.
சனீஸ்வரரை எப்படி வழிபட வேண்டும் ?
அம்மன் சன்னதிக்குச் சென்ற பின்பு தான் சனீஸ்வரர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். சிலர் எடுத்ததும் சனீஸ்வரன் சன்னிதிக்குச் செல்வார்கள். அப்படி சென்று வழிபடுவது முறையான வழிபாடு கிடையாது. அம்மன் சன்னதிக்குச் சென்ற பிறகு, சனி பகவானைச் சென்று வழிபட்டால் தான் சனிதோஷம் முற்றிலும் நீங்கப் பெறுவீர்கள்.
சனி பகவான் மந்திரம்
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ" 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.சனி ஸ்தோத்திரம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம்ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில் ஸ்தோத்திரம்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
தொண்டு
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.நோன்பு நாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹிதந்நோ மந்த: ப்ரசோதயாத்.
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.


Your comment will be visible after approval.