Fish Fry Recipe in Tamil
மீன் வறுவல் செய்வது எப்படி ?
- 500 கிராம் மீன்
- 25 கிராம் பூண்டு
- 25 கிராம் இஞ்சி
- ½ எலுமிச்சம் பழம்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 சிட்டிகை மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை :
- முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை துண்டுகளாக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்பு இஞ்சி பூண்டை பேஸ்ட்க அரைத்துக்கொள்ளவும்.
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்த்துக்கொள்ளவும்.
- எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு BOWL லை எடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியான சாந்து போல கலந்து கொள்ளவும்.
- பின்பு நாம் துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் மீனை எடுத்து இந்த மசாலாவில் போட்டு அதை நம் கைகளின் மூலம் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை அப்படியே ஊற விடவும்.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு PAN ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீனை எடுத்து ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
- மீனை திருப்பி போட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
- மீன் நன்றாக வெவதற்காக வேகும் மீன் மீது நெய் அல்லது எண்ணெயை தெளித்து விடவும்.
- பிறகு மீனை மீண்டும் இரு புறமும் திருப்பி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விட்டு பின்பு எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும்
மிகவும் அசத்தலாக இருக்கும் மீன் வறுவல் தயார்.
#Fish Fry Recipe - Fish Fry Recipe in Tamil*


Your comment will be visible after approval.